பொழுதுபோக்கு

3 படத்தில் விஜய்க்கு அப்பா; பல படங்களில் ரஜினிக்கு வில்லன்: கமலுடன் நடிக்காத இந்த நடிகர் யார் தெரியுமா?

Published

on

3 படத்தில் விஜய்க்கு அப்பா; பல படங்களில் ரஜினிக்கு வில்லன்: கமலுடன் நடிக்காத இந்த நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்து அசத்திய நடிகர், ஒருவர் ரஜினிகாந்துக்கு வில்லனாகவும், நண்பராகவும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்தாலும், இவர் கமல்ஹாசன் படங்களில் நடித்ததே இல்லை. அந்த நடிகர் தான் ரகுவரன்.தனது வில்லத்தனத்திலும் சிறப்பாக நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகர் ரகுவரன். 1958-ம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர், 1982-ம் ஆண்டு வெளியாக ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாக வந்த இவர், வெற்றி கிடைக்காத காரணத்தால் வில்லன் அவதாரம் எடுத்து பெரிய வெற்றிகளை குவித்திருந்தார்,1986-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் மிஸ்டர் பரத் படத்தில் வில்லனாக நடித்த இவர், ஊர் காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா, உள்ளிட்ட படங்களில் ரஜினிகக்கு வில்லனாக நடித்து இடையில் 1989-ம் ஆண்டு வெளியான சிவா என்ற படத்தில் ரஜினிக்கு நண்பராக நடித்திருந்தார். அதன்பிறகு மீண்டும் வில்லனாக நடிக்க தொடங்கிய ரகுவரன், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார்.1994-ம் ஆண்டு வெளியான கேப்டன் படத்தில் 2 மகன்களுக்கு அப்பாவாக வயதான வில்லன் கேரக்டரில் நடித்து அசத்திய ரகுவரன், தனது 38-வது வயதில் 1996-ம் ஆண்டு விஜய்க்கு அப்பாவாக செல்வா என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், அடுத்து 1997-ம் ஆண்டு லவ்டுடே படத்திலும் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார், இந்த இரு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தது. இடையில் நேருக்கு நேர் படத்தில் விஜய்க்கு அண்ணன் கேரக்டரில் நடித்த ரகுவரன் முகவரி படத்தில் அஜித்துக்கு அண்ணனாக நடித்தார்.என் சுவாசக்காற்றே படத்தில் அரவிந்த் சாமி, பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கும் அப்பாவாக நடித்த ரகுவரன், உயிரிலே கலந்தது படத்தில் சூர்யாவுக்கு அண்ணனாக நடித்திருந்தார். 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம், இவரை வில்லனில் பெரிய மாஸாக காட்டிய படமாக அமைந்தது. கடைசியாக தகுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி என்ற படத்தில் அவரின் அப்பாவாக நடித்திருந்த ரகுவரன், தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நடிப்பில் வெளியான தொடக்கம் படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version