இலங்கை

NPP அதிரடியால் கிலியில் முன்னாள் ஜனாதிபதிகள்

Published

on

NPP அதிரடியால் கிலியில் முன்னாள் ஜனாதிபதிகள்

  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், தங்களது பதவி காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படலாம் என கொழும்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது விவகாரம் உலகளவில் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டுப் பயணத்துக்காக, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவை, கைது செய்து கொழும்பு கோட்டை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் மூன்று நாட்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

இந்தநிலையில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது வேறு எவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படும் என்று அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது வரையில் யாருக்கும் எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா என்பதை அரசாங்கத்தரப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான NPP அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் முன்னாள் ஜனாதிபதில் கிலியில் உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version