இலங்கை
அறிமுகமாகும் புலனாய்வு விசாரணை செய்யும் விசேட அமைப்பு!
அறிமுகமாகும் புலனாய்வு விசாரணை செய்யும் விசேட அமைப்பு!
இலங்கை காவல்துறையால் AMIS கைது செய்யப்பட்டு புலனாய்வு விசாரணை செய்யும் விசேட அமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், புதிய நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அதாவது எமது நாட்டில் உள்ள 25 நிர்வாக பிரிவிலும் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் அந்நபர் தொடர்பான தவல்களை குற்றங்களுக்கான தகவல் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
குற்றங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன.
உதாரணமாக யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்படும் ஒரு நபர் தொடர்பில் குறித்த காவல் துறையின் பொறுப்பதிகாரி தொடர்பு கொண்ட இரண்டு நிமிடத்தில் அவர் தொடர்பான தகவல்கள் அதாவது நாடு முழுவதும் தேடப்படும் குற்றவாளி அல்லது பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரா என்ற தகவல்கள் பறந்து விடும்.
மேலும் தேடப்படும் குற்றவாளியா என்ற தகவல்கள் கிடைத்து விடும் அத்தோடு, இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.