இலங்கை

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள்

Published

on

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரை அழைத்து வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

சில மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், மாலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

Advertisement

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திரணக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனை கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஐவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டு சற்றுமுன்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version