சினிமா

இனி முத்தக் காட்சிகளுக்கு நோ.. நிச்சயத்துக்கு பின் விஷால் என்ன இப்படி மாறிட்டாரு?

Published

on

இனி முத்தக் காட்சிகளுக்கு நோ.. நிச்சயத்துக்கு பின் விஷால் என்ன இப்படி மாறிட்டாரு?

தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகர் விஷால். கடைசியாக இவர் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது.இந்நிலையில், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷால் மற்றும் நடிகை தன்சிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால் சில அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.அதில், ” தொலைப்பேசி மற்றும் இணையத்தில் எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா கோலாகலமாக நடக்கவுள்ளது.நடிகர் சங்க கட்டிடம் திறந்ததும் எங்களின் திருமணம் நடக்கும். பேச்சுலர் வாழ்க்கை நிறைவடைந்ததை தொடர்ந்து, என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வர உள்ளது.குறிப்பாக சினிமாவில் காதல் படங்களில் நடிப்பேன். ஆனால் முத்தக்காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version