இலங்கை
குடிவரவு திணைக்களத்திற்குள் பாரிய மோசடி!
குடிவரவு திணைக்களத்திற்குள் பாரிய மோசடி!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் சட்டவிரோத விசா வழங்கப்படுவதாகவும், அத்தகைய விசாக்களை வழங்குவதற்காக இலஞ்சமாக பணம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான கிடைத்த பல ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தலைமையிலான விசாரணைப் பிரிவுகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் சட்டவிரோதமாக விசா பெறும் சீன மாபியாக்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை அரச ஊடகமொன்று வெளிப்படுத்தியது.
அதனடிப்படையில் பல தரப்பினரால் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைப் பிரிவுகளுக்குக் கிடைத்த தகவல்களில், இதற்காக பெறப்பட்ட இலஞ்சம் பற்றிய தகவல்கள் முக்கியமானவையாகும் என கூறப்படுகின்றது.
இத்தகைய இலஞ்ச பணம் விநியோகம், அவை வரவு வைக்கப்பட்டுள்ள கணக்குகள் போன்றவை குறித்து விசாரணைப் பிரிவுகளுக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிய வருகிறது.