இலங்கை
செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்!
செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்!
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான இஷார செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றொரு நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் நேற்று (29) கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு மேலதிகமாக, அடையாளம் காணப்பட்ட இந்த நபரிடம் உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
மேலும், இந்த சந்தேகநபர் செவ்வந்தியின் தொலைபேசிக்கு அடிக்கடி அழைப்பு விடுத்திருப்பதாகவும், தொலைபேசி பதிவுகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தற்போது காவலில் உள்ள மூன்று சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி தொடர்புகள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், குற்றப்பிரிவு அதிகாரிகளின் முன்மொழிவுகளை பரிசீலித்த நீதிவான், குறித்த சந்தேகநபருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவும் அவரது தொலைபேசி அழைப்பு தரவுகளை பரிசோதிக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.