இலங்கை

தொப்பை கொழுப்பை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த சைவ உணவுகள் போதுமே!

Published

on

தொப்பை கொழுப்பை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த சைவ உணவுகள் போதுமே!

புரதம் என்னும் புரோட்டீன் நமது உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். குறிப்பாக உடல் வளர்ச்சிக்கும் தசை ஆரோக்கியத்திற்கும் அவசியம். அதோடு, உடல் பருமனை குறைக்க சேர்க்கப்பட வேண்டிய இன்றியமையாத ஊட்டசத்து.

புரோட்டீன் உடல் வளர்ச்சி மற்றும் திசுக்களை பழுதுபார்க்க உதவுகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுகளை, தவறாமல் சேர்த்துக் கொள்வதால் வியக்கத் தக்க பலன்களை பெறலாம்.

Advertisement

 பீன்ஸ் வகை பருப்புகள்: சோயாபீன்ஸ், கொத்துக்கடலை, ராஜ்மா பீன்ஸ் வகை பருப்புகளில், அதிக அளவிலான புரதம் மட்டுமல்லாது, நார்ச்சத்துக்களும் உள்ளது. எண்ணற்ற பிற சத்துகளும் கிடைக்கும். இது உங்கள் எடை இழப்பு முயற்சிகளுக்கு முக்கியமானது.

 ப்ரோக்கோலி: புரதம், மட்டுமல்லாது வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி உங்கள் உட்ல பருமன் குறைய பெரிதும் உதவும். இதனை அளவிற்கு அதிகமாக வேக வைத்தால், ஊட்டசத்துக்கள் முழுமையாக கிடைக்காது.

கினோவா: பசையம் இல்லாத தானியமான கினோவா புரதத்தின் முழுமையான ஆதாரம். குயினோவா ஒரு நாளைக்கு போதுமான புரத தேவையை பூர்த்தி செய்யும். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

Advertisement

 பாதாம்: தினமும் பாதாம் பருப்புகளை உட்கொள்வது உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். கொழுப்பை எரிக்க உதவும் அமினோ அமிலமான எல்-அர்ஜினைன் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கீரை: வேகவைத்த முட்டையில் உள்ள அளவை ஒத்த புரதம் கீரையில் உள்ளது. அதோடு, பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. கலோரிகளும் மிகவும் குறைவு. அளவோடு வேகவைத்த கீரை எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும்.


பன்னீர்:
பாலாடைக்கட்டி அல்லது பன்னீரில் புரதம் அதிகம் உள்ளது. அதோடு, அதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகளும் மிகக் குறைவு, மேலும் வைட்டமின் பி 12, கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version