இலங்கை
பயம் காட்டுவதற்காகவே ரணில் கைது!
பயம் காட்டுவதற்காகவே ரணில் கைது!
அரசியல்வாதிகளுக்குப் பயம் காட்டுவதற்காகவே ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்தமை அரசியல் பழிவாங்கல் எனவும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், அரசியல் பழிவாங்கல் இன்றி ஊழல் செய்தவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.