பொழுதுபோக்கு
பிரபல நடிகையின் தங்கை; 33 ஆண்டுக்கு பின் தமிழில் படத்தில் ரீ-என்ட்ரி; கேப்டனுடன் நடித்த இவர் யார் தெரியுமா?
பிரபல நடிகையின் தங்கை; 33 ஆண்டுக்கு பின் தமிழில் படத்தில் ரீ-என்ட்ரி; கேப்டனுடன் நடித்த இவர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில், ராமராஜன் படத்தின் மூலம் அறிமுகமாகி அவருடன் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை சாந்தி பிரியா, 33 ஆண்டுகளுக்கு பிறகு, வெற்றிமாறன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி ஆகியுள்ளார்.தமிழ் சினிமாவில், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் சாந்தி பிரியா. 1987-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து, ஒன்று எங்கள் சாதியே, நேரம் நல்லாருக்கு என ராமராஜனுடன் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார்.அதன்பிறகு, ரயிலுக்கு நேரமாச்சு, கைநாட்டு, பூவிழி ராஜா, சிறையில் பூத்த சின்ன மலர், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார் கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு உயர்ந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார், இடையில், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்திருந்த சாந்தி பிரியா, 1994-ம இக்கி பி இக்கா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சினிமாவில் நடிக்காத இவர் தற்போது 33 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி ஆகியுள்ளளார்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன், பாலிவுட் சினிமாவின், இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள பேட் கேர்ள் என்ற படத்தில் தான் சாந்தி பிரியா ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படமத், தனித்துவமான கதைக்களம் மற்றும் துணிச்சலான செயல்களுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாந்தி பிரியாவின் முக்கிய கதாபாத்திரம் கதைக்கு ஒரு வலுவான உணர்ச்சிபூர்வமான மற்றும் நாடகத் தன்மையை சேர்க்கும் என்று கூறப்படுகிறது.தனது கதாபாத்திரம் குறித்து நடிகை சாந்தி பிரியா, “ஒரு நடிகையாக, ரசிகர்களின் மனதை ஆழமாகத் தொடும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டவள். ‘பேட் கேர்ள்’ ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். இது சமூகத்தின் எல்லைகளைத் தாண்டி, புதிய கண்ணோட்டங்களை முன்வைத்து, சொல்லப்பட வேண்டிய ஒரு கதையைச் சொல்கிறது. இத்தகைய தொலைநோக்கு பார்வையுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.இத்திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் பேசப்படும் தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாந்தி பிரியாவின் வலுவான கதாபாத்திரத்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. இந்த படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.