இலங்கை

புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் ஜனாதிபதியிடம் வழங்கிவைப்பு

Published

on

புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் ஜனாதிபதியிடம் வழங்கிவைப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இது புழக்கத்திற்கான நினைவுத்தாள் என வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அத்துடன் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஐந்தாவது நினைவுத்தாள் இதுவாகும்.

வளர்ச்சிக்கான அடித்தளமான பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் மத்திய வங்கியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ‘செழிப்புக்கான ஸ்திரத்தன்மை’ எனும் ஆண்டு விழா கருப்பொருளின் கீழ் இந்த நினைவுத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என் தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் தலைவர் பி.டி.ஆர் தயானந்தவும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version