இந்தியா
புதுச்சேரி மின்துறையை அதானி குழுமத்துக்கு விற்கவில்லை: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
புதுச்சேரி மின்துறையை அதானி குழுமத்துக்கு விற்கவில்லை: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
புதுச்சேரியின் உள்துறை அமைச்சரும், மின்துறை அமைச்சருமான நமச்சிவாயம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:- புதுச்சேரி மின்துறையை அதானி குழுமம் வாங்கிவிட்டதாக வந்த தகவல் பொய். மின்துறையை தனியார் மயமாக்க எந்தவித ஒப்பந்தபுள்ளியும் கோரவில்லை. தனியாருக்கு மின்துறையை கொடுக்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துகொள்கிறேன். நீண்ட நாட்களுக்கு முன்பாக கொள்கை முடிவால் மின்துறையை தனியார் மயமாக்கும் நிலைமை இருந்தது. மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சி, எதி்கட்சியை சேர்ந்தவர்கள் மின்துறை தனியார் மயமாக்க விடமாட்டோம் என எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 51% புதுவை அரசும், 49% பங்குகளை தனியாருக்கு விற்க முடிவெடுக்கப்பட்டது. தொழிற்சங்கத்தினர் நீநிமன்பத்தை அனுகி வழக்கு தொடுத்தனர். அது இதுவரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்க புதுச்சேரி அரசு எந்த தனியார் நிறுவனத்திற்கும் கொடுக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது.தவறான செய்தியை வைத்து பொதுமக்கள், மின்துறை ஊழியர்கள் எதிர்வினையாற்ற வேண்டாம். அதானி குரூப் அதானி எனர்ஜி சொல்யூஷன் என்ற பெயரில் புதுச்சேரி மின்துறை கைப்பற்றியதாக கூறியிருந்தால் அதன் மீது சட்டத்துறையுடன் கலந்து பேசி அரசு சட்ட ரீதியான என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கமுடியுமோ அது கண்டிப்பாக எடுக்கப்படும். சோலார் மற்றும் மின்துறை தொடர்பாக எந்த விண்ணப்பமும் அதானி குழுமம் அரசுக்கு கொடுக்கவில்லை. மின்துறையில் பல புதிய பதவிகள் எடுத்துள்ளோம். பலருக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளோம். அப்படி இருக்கு எப்படி தனியாருக்கு கொடுக்க முடியும்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.