சினிமா

பேச்சுலர் Life-க்கு டாடா.. நிச்சயதார்த்தத்துடன் அதிரடி முடிவெடுத்த விஷால்! என்ன தெரியுமா?

Published

on

பேச்சுலர் Life-க்கு டாடா.. நிச்சயதார்த்தத்துடன் அதிரடி முடிவெடுத்த விஷால்! என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன் ஸ்டைலான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஷால்.பேச்சுலர் என அழைக்கப்பட்டு வந்த அவர், தனது பிறந்த நாளான கடந்த ஆகஸ்ட் 29 அன்று, நடிகை தன்சிகாவுடன் நிச்சயதார்த்தத்தில் இணைந்திருந்தார்.இந்த நிகழ்வு ரசிகர்களுக்கும், திரையுலகத்துக்கும் ஒரே நேரத்தில் வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.அத்துடன் விஷால் செய்தியாளர்களிடம் பகிர்ந்த சில உண்மைகள் மற்றும் தனது  திரைபயணத்தில் இனி எதிர்பார்க்கும் மாற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.விஷாலின் பிறந்த நாளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில், அவர் தனது வாழ்க்கை துணை நடிகை தன்சிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.இந்த நிகழ்வு சென்னையில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட விழாவாக இருந்தது. இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் விஷாலின் திருமணத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்காகியுள்ளது.நிச்சயதார்த்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து தெளிவாகப் பேசினார்.அவர் கூறியதாவது, “எனது பிறந்த நாளில் தொலைபேசி மற்றும் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி.இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா மிகுந்த கோலாகலத்துடன் நடக்கவுள்ளது. அதன் பிறகு என் திருமணம் நடைபெறும். பேச்சுலர் வாழ்க்கை முடிவடைந்துவிட்டது. இனி வாழ்க்கையில் பல மாற்றங்கள் வர உள்ளன.” என்றார். மேலும், “நான் இனியும் சினிமாவில் காதல் படங்களில் நடிப்பேன். ஆனால், முத்தக் காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று தீர்மானித்துள்ளேன்.” எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version