இலங்கை

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

Published

on

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்

  யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் (30) திடீரென உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வட்டுக்கோட்டை – கலட்டி பகுதியைச் சேர்ந்த நடராசா ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

Advertisement

குடும்பஸ்தர் இன்று காலை உடல் சுகயீனம் காரணமாக படுத்திருந்த நிலையில் அவர் அசைவற்று காணப்பட்டதால் குடும்பத்தினர் அவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

மேலும் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version