இலங்கை

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் (காணொளி)

Published

on

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் (காணொளி)

சர்வதேச நீதி கோரி மாபெரும் போராட்டம் யாழில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச வலிந்து காணமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்காவில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இப்போராட்டம் ஆனதுஉள்நாட்டு பொறிமுறையை நிராகரித்தும், தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வடகிழக்கில் இன்றையதினம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இது மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்திப் பூங்கா நோக்கி நடைபெறுகிறது.
இந்த மக்கள் பேரணியில் மதக்குருமார்கள், பாதிரியார்கள், சமூக செயல்பட்டார்கள், அரசியவாதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் எல்லோரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டைத்தை முன்னடுத்து செல்கின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version