இலங்கை

யாழ். நூலகத்துக்கு ஜனாதிபதி வருகை – மாநகர மேயருக்கு அழைப்பில்லை!

Published

on

யாழ். நூலகத்துக்கு ஜனாதிபதி வருகை – மாநகர மேயருக்கு அழைப்பில்லை!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாநகர சபையின் பிரதான நூலகத்துக்கு வருகை தரும் அதேநேரம் நூலகத்தில் இடம்பெறும் எந்த நிகழ்வுக்கும் மாநகர மேயருக்கு அழைப்பு இல்லை எனத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்துக்கு நாளைமறுதினம்(1) திங்கட்கிழமை வருகை தரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மாவட்ட செயலகத்தில் கடவுச்சீட்டு அலுவலகத் திறப்பு, மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதான அடிக்கல் நாட்டல் போன்றவற்றுடன் மாநகர சபையின் பிரதான நூலகத்தில் ஒரு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குகொள்கின்றார்.

Advertisement

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி பங்குபற்றும் நிகழ்வுகள் தொடர்பான ஏற்பாட்டுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளரின் ஏற்பாட்டில் கடந்த 25ஆம் திகதியன்று இடம்பெற்றபோது மாநகர சபையில் இருந்து ஆணையாளர் மற்றும் நூலகர் ஆகியோரை மட்டுமே மாவட்ட செயலாளர் எழுத்து மூலமாக அழைத்திருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர மேயர்  மதிவதனி விவேகானந்தராஜாவை அழைக்கவோ அல்லது ஜனாதிபதியின் வருகை தொடர்பில் அவருக்கு அறிவிக்கவோ இல்லை எனத் தற்போது தெரியவந்துள்ளது.

மாவட்ட செயலகம் புறக்கணித்தமை போன்று ஜனாதிபதி செயலகமும் இதுவரை மாநகர மேயருக்கு எந்தவொரு அழைப்போ அல்லது அறிவித்தலோ வழங்கவில்லை.

Advertisement

இதன் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை நூலகத்தில் இடம்பெறும் ஜனாதிபதியின் வருகையின்போது மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும், அரச தரப்பு (தேசிய மக்கள் சக்தி) மாநகர சபை உறுப்பினர்கள் மட்டுமே பங்குகொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version