இலங்கை
வெளிநாட்டவரின் உயிரை காத்த பொத்துவில் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்
வெளிநாட்டவரின் உயிரை காத்த பொத்துவில் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்
அம்பாறையில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்க உட்பட்ட கொட்டுக்கல் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொத்துவில் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய சுவீடன் நாட்டைச் சேர்ந்தவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு பிரஜை நேற்றைய தினம் மாலை கொட்டுஹல் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதுதிடீரென கடலில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் வெளிநாட்டு பிரஜையை காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்று அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.