சினிமா
6வருட உழைப்பு.. மக்களுக்காகத் தான்.! பாலாவின் மனிதநேய செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!
6வருட உழைப்பு.. மக்களுக்காகத் தான்.! பாலாவின் மனிதநேய செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!
இன்று தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த படைப்புகளால் மக்கள் மனங்களை வென்றவர் KPY பாலா. “கலக்கப்போவது யாரு?” நிகழ்ச்சியில் தன் பயணத்தை ஆரம்பித்து, இன்று நம்மிடையே ஒரு நல்ல கலைஞராக மட்டும் இல்லாமல், நல்ல மனுஷனாகவும் திகழ்கிறார். சமீபத்தில், ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்த கனவு, அனைவரையும் ஆச்சர்யத்திலும், உணர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.அதன்போது பாலா, “இலவச ஹாஸ்பிடல் கட்டணுங்கிறது தான் என்னோட மிகப்பெரிய கனவு. 6 வருஷம் உழைச்சு என் காசில வாங்கிய இடம் தான் இது. வீடு கட்ட தான் இடத்த வாங்கினான் ஆனா வீடு கட்டி வாழ்ந்தால் நான் மட்டும் தான் சந்தோசமா இருப்பேன். அதே இலவச ஹாஸ்பிடல் கட்டினா ஒரு நாளைக்கு 100 ஏழை மக்கள் சந்தோசமாக இருப்பாங்க..” என்று தெரிவித்தார். பாலா இன்று ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தாலும், அவரின் மனதில் எப்போதும் மக்களுக்கு உதவனும் என்ற எண்ணம் வாழ்ந்து வருகிறது. இது அவரின் சொந்த அனுபவங்களிலிருந்தும் தோன்றியிருக்கலாம். வாழ்க்கையில் பல தடைகளைக் கடந்து, இன்று ஒரு நிலையை எட்டிய பாலா, அந்த அனுபவங்களை மறக்காமல் சமூகத்துக்கு திருப்பி கொடுக்க விரும்புகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலவச மருத்துவமனை கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. அது அருமையான திட்டமிடல், பொருளாதார ஆதாரம் மற்றும் நீண்ட நேர உழைப்பு தேவைப்படும். ஆனால், பாலா தனது சொந்த முதலீட்டில் தொடங்கிய இந்த முயற்சி அனைவராலும் பாரட்டப்படுகின்றது.