பொழுதுபோக்கு

என்‌ வளர்ச்சிக்கு காரணம், பட்டாபியை உருவாக்கிய அண்ணா; சீரியல் இயக்குனர் மரணத்திற் எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான இரங்கல்!

Published

on

என்‌ வளர்ச்சிக்கு காரணம், பட்டாபியை உருவாக்கிய அண்ணா; சீரியல் இயக்குனர் மரணத்திற் எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான இரங்கல்!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் இயக்குநர் எஸ்.என். சக்திவேல், உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கலைஞர்கள் மத்தியிலும், ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.என். சக்திவேல் தனது சினிமா பயணத்தை வெள்ளித்திரையில் தான் தொடங்கினார். 2015-ல் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ மற்றும் 2018-ல் ‘காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். ஆனால், அவரது தனித்துவமான நகைச்சுவை உணர்வும், இயல்பான கதை சொல்லும் திறனும் சின்னத்திரையில் தான் முழுமையாக வெளிப்பட்டது. சன் டிவியில் ஒளிபரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் வெற்றிக்கு இவரின் இயக்கம் முக்கியக் காரணமாக அமைந்தது. கடைசியாக, ஜீ தமிழில் வெளியான ‘பட்ஜெட் குடும்பம்’ தொடரையும் இயக்கியிருந்தார்.எஸ்.என். சக்திவேலின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர், தனது ஆழ்ந்த வருத்தத்தை ஒரு வீடியோவில் பதிவு செய்தார். ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரில் ‘பட்டாபி’ என்ற பாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் எம்.எஸ். பாஸ்கர்.”என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய நண்பன் மற்றும் நலம் விரும்பி சக்திவேல். அவர் இயக்கிய தொடர் மூலமாகத்தான் தமிழக மக்களிடம் எனக்குப் பெரிய அறிமுகம் கிடைத்தது. நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அதற்கு சக்திவேல் அண்ணன் ஒரு முக்கியக் காரணம்” என்று அவர் கூறினார். மேலும், “மிகவும் நல்ல மனிதர். அவரது வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அந்தப் போராட்டத்துடனே அவர் இறைவனிடம் சென்றுவிட்டார்” என்று கண்ணீருடன் குறிப்பிட்டார்.எம்.எஸ். பாஸ்கரின் இந்த உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள், அவர்களின் நட்பு எவ்வளவு ஆழமானது என்பதை எடுத்துரைத்தது. ஒரு டப்பிங் கலைஞராக, பின்னர் நடிகராக, தனது கடின உழைப்பால் முன்னேறிய பாஸ்கரின் வாழ்வில் சக்திவேல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது அவரது வார்த்தைகள் மூலம் வெளிப்பட்டது. இயக்குநர் எஸ்.என். சக்திவேலின் மறைவு, தமிழ் கலைத்துறைக்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version