இலங்கை

கண்டி தேசிய மருத்துவமனையின் 28 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு!

Published

on

கண்டி தேசிய மருத்துவமனையின் 28 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு!

கண்டி தேசிய மருத்துவமனைக்கு சொந்தமான 58 ஏக்கர் நிலங்களில் 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனை மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Advertisement

குறித்த  நிலங்களில் வீடுகள், கடைகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக மருத்துவமனையின் செயல்பாடுகளை பராமரிப்பதில் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இரண்டாவது பெரிய தேசிய மருத்துவமனைகவும், போதனா மருத்துவமனை எனவும் அழைக்கப்படும் கண்டி தேசிய மருத்துவமனை, தற்போது 80 வார்டுகள், 11 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், நில ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்தமருத்துவமனையை மேம்படுத்துவதில் தடைகள் ஏற்படுகின்றன.

Advertisement

அத்துடன், மருத்துவமனைக்குச் செல்லும் வீதிகளில் கடைகள், மலர்சாலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version