சினிமா

கமலுடன் ரொமான்ஸ் செய்த நடிகை கமலினி!! சினிமாவைவிட்டு விலக இதான் காரணமாம்…

Published

on

கமலுடன் ரொமான்ஸ் செய்த நடிகை கமலினி!! சினிமாவைவிட்டு விலக இதான் காரணமாம்…

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை கமலினி முகர்ஜி. கோவிந்துடு படத்திற்கு பின் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகினார் கமலினி.இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் இருந்து விலக காரணம் என்ன என்று பகிர்ந்துள்ளார். கோவிந்துடு படம் தான் சினிமாவில் இருந்து விலக முக்கிய காரணம். படப்பிடிப்பு அனுபவம் அற்புதமாக இருந்தபோதிலும் திரையில் தன் கதாபாத்திரம் இறுதியில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதில் எனக்கு வருத்தம் ஏற்பட்டது.படகுழுவினருடன் எனக்கு எந்த பிரச்சனையிம் இல்லை, குழுவினர் அற்புதமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளித்தனர். ஆனால் என் கதாபாத்திரம் வெளிவந்த விதம் எனக்கு உடன்பாடில்லை.எந்த சர்ச்சையும் இல்லை, சண்டையும் இல்லை, வருத்தமாக உணர்ந்ததால் சிறிது காலம் படங்களில் இருந்து விலகினேன் என்று கமலினி முகர்ஜி தெரிவித்துள்ளார். இதன்பின் கமலினி புலிமுருகன் படத்தில் நடிகர் மோகன்லாலின் மனைவியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version