இந்தியா

கேரளாவில் உணவகத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்த பீகார் அதிகாரி; கனரா வங்கி ஊழியர்கள் ‘பீஃப்’ திருவிழா போராட்டம்

Published

on

கேரளாவில் உணவகத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்த பீகார் அதிகாரி; கனரா வங்கி ஊழியர்கள் ‘பீஃப்’ திருவிழா போராட்டம்

கேரளாவில் மாட்டிறைச்சி அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. மேலும், கால்நடைகளின் விற்பனை மற்றும் இறைச்சிக்கு எதிரான முயற்சிகளை எதிர்த்து, ‘மாட்டிறைச்சித் திருவிழாக்கள்’ போன்ற போராட்டங்கள் மூலம் மாநிலத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.ஆங்கிலத்தில் படிக்க:இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பை (BEFI) சேர்ந்த கனரா வங்கி ஊழியர்கள், வங்கியின் கொச்சி மண்டல அலுவலகத்தில் ஒரு மாட்டிறைச்சித் திருவிழாவை ஏற்பாடு செய்தனர். மண்டல அதிகாரி, அலுவலக உணவகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.பீகாரைச் சேர்ந்த மண்டல அதிகாரி அஸ்வினி குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வியாழக்கிழமை அன்று இந்த மாட்டிறைச்சித் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. கொச்சி அலுவலகத்தில் சேர்ந்த பிறகு, உணவகத்தில் மாட்டிறைச்சி பரிமாறக் கூடாது என்று அவர் வாய்மொழியாக உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.வியாழக்கிழமை ஊழியர்கள் வங்கி அலுவலகத்திலேயே மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி, அந்த உத்தரவை மீறினர். மாட்டிறைச்சியுடன், மலபார் பரோட்டா, பரோட்டா பரிமாறப்பட்டது.எர்ணாகுளத்தில் உள்ள பி.இ.எஃப்.ஐ (BEFI) தலைவர், உணவகத்தில் எப்போதாவது மாட்டிறைச்சி உணவுகள் பரிமாறப்படும் என்று கூறினார். “சில நாட்களுக்கு முன்பு, மண்டல மேலாளர், சக ஊழியர்களிடம் அலுவலகத்தில் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். உணவகம் அவ்வப்போது மாட்டிறைச்சியைப் பரிமாறும். அவர் அந்த உணவை இனிமேல் பரிமாற வேண்டாம் என்று ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த நாட்டில் எங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. இது ஒரு தனிப்பட்ட விருப்பம். நாங்கள் யாரையும் மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தவில்லை. கேரளாவில், ஒரு அதிகாரி எப்படி இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியும்?” என்று அந்தத் தலைவர் கேள்வி எழுப்பினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ(மா)) ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் கே.டி. ஜலீல், தனது முகநூல் பதிவில், “சங் பரிவார் நிகழ்ச்சி நிரல்” கேரளாவில் பலிக்காது என்று கூறினார். “பிறர் என்ன சாப்பிட வேண்டும், என்ன அணிய வேண்டும் என்று தீர்மானிக்க எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை. இங்குள்ள மக்கள் துணிச்சலாக பாசிசவாதிகளுக்கு எதிராகப் பேசலாம். யாரும் உங்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், கம்யூனிஸ்டுகள் உங்கள் பக்கம் இருக்கும்போது, யாரும் காவிக் கொடியை உயர்த்தி மக்களின் அமைதியைக் கெடுக்க விடமாட்டார்கள்” என்று தவனூர் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.இந்த சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.கேரளாவில் மாட்டிறைச்சி அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. மேலும், கால்நடைகளின் விற்பனை மற்றும் இறைச்சிக்கு எதிரான முயற்சிகளை எதிர்த்து, ‘மாட்டிறைச்சித் திருவிழாக்கள்’ போன்ற போராட்டங்கள் மூலம் மாநிலத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version