இலங்கை
கைது செய்யப்பட்ட முத்துநகர் விவசாயிகளை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு!
கைது செய்யப்பட்ட முத்துநகர் விவசாயிகளை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு!
திருகோணமலை – சீனக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முத்துநகர் விவசாயிகள் ஐவரையும் விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் (30) சீனக்குடா பொலிஸ் நிலையம் முன்பாக நடத்தப்பட்டுள்ளது.
முத்துநகர் பகுதி விவசாய காணியில் தனியார் நிறுவனத்தினர் பெகோ இயந்திரம் மூலமாக (27) சூரிய மின்சக்தி திட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட வேலையில் அங்கு குறித்த விவசாயிகள் சென்று தடுத்து நிறுத்த முற்பட்ட வேலையில் வாய்த் தகராறு ஆரம்பமானதுடன் பின்னர் கலவரமாகி தனியார் நிறுவன ஊழியர்கள் பொல்லால் விவசாயிகளை தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சீனக்குடா பொலிஸாரினால் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விவசாயிகளை விடுதலை செய்ய கோரியும் பெகோ இயந்திர சாந்தவை கைது செய்யக் கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.