இலங்கை

கொழுக்கட்டையால் வாழ்வை இழந்த மாணவி ; கதறும் குடும்பம்

Published

on

கொழுக்கட்டையால் வாழ்வை இழந்த மாணவி ; கதறும் குடும்பம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இ.பி. சாலையில் வசிப்பவர் முனுசாமி.

இவரது 14 வயதான மகள் மோகன பிரியா அரச பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisement

நேற்று முன்தினம் (29) மாலை மோகன பிரியா, தாயாரிடம் கொழுக்கட்டை செய்து தருமாறு கேட்டு அடம் பிடித்துள்ளார்.

அப்போது அவர் நாளைக்கு செய்து தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி திடீரென வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

உடனடியாக அவரை மீட்டு அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக பெற்றோர் அனுமதித்த போதிலும் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version