சினிமா
கொழும்பில் ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் ஜனனி..! வைரலான இன்ஸ்டா post இதோ..!
கொழும்பில் ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் ஜனனி..! வைரலான இன்ஸ்டா post இதோ..!
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக மாறியவர் ஜனனி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்து, அவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி, பெரும் ரசிகர் ஆதரவை பெற்றார்.பிக்பாஸ் வீட்டுக்குள் தனது மென்மையான பேச்சால் பலரின் கவனத்தை ஈர்த்த ஜனனி, தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அத்துடன், போட்டோஷூட்கள், விளம்பரங்கள் மற்றும் சினிமா வாய்ப்புகள் என அவர் பிஸியாகிக் கொண்டே இருக்கிறார்.பிக்பாஸ் முடிந்த பிறகு ஜனனிக்கு பல வாய்ப்புகள் காத்திருந்தன. அதில் மிக முக்கியமானதாய் இருந்தது, விஜய் நடித்த “லியோ” திரைப்படம். இந்தப் படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அவருடைய லுக்கை ரசிகர்கள் வரவேற்றனர்.’லியோ’ வெற்றிக்குப் பிறகு, ‘உசுரே’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஜனனி. காதல் மற்றும் திகில் கலந்து வரும் இந்த திரைப்படம், ஜனனியின் நடிப்பை இன்னும் உயர்த்தியிருந்தது.சமீபத்தில் ஜனனி இலங்கையின் கொழும்பு நகரத்தில் உள்ள ஒரு பிரபல ரெஸ்டாரெண்ட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் ஸ்டைலாகவும், அழகாகவும் காணப்படுகின்றார்.