சினிமா

நான் ஏன் அவமதிக்கணும்.? யோகிபாபு சர்ச்சைக்கு விளக்கமளித்த பாவனா.! அப்புடி என்ன நடந்த.?

Published

on

நான் ஏன் அவமதிக்கணும்.? யோகிபாபு சர்ச்சைக்கு விளக்கமளித்த பாவனா.! அப்புடி என்ன நடந்த.?

கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வரும் ஒரு சர்ச்சை வீடியோ, தமிழ் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் யோகி பாபுவை, ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ திறப்பு விழா நிகழ்ச்சியின் போது தொகுப்பாளினி பாவனா கலாய்த்ததாகக் கூறப்படும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் பலரின் கவனத்தையும் விமர்சனங்களையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக யோகி பாபுவின் ரசிகர்கள், “இதே சம்பவம் வேறு எந்த பிரபல நடிகருடனாவது நடந்திருக்குமானால் பாவனா இப்படிச் நடந்திருக்க மாட்டார்” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பலரும் பாவனாவை குற்றம்சாட்டி விமர்சித்துள்ள சூழ்நிலையில், பாவனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார்.விரிவாகச் சொல்வதானால், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ திறப்பு விழாவில் பாவனா, மேடையில் தொகுப்பாளராக இருந்தார். அங்கு சிறப்பு விருந்தினராக நடிகர் யோகி பாபு வந்திருந்தார். அவரிடம் சில கேள்விகள் கேட்கும் போது பாவனா, நண்பனுடன் நகைச்சுவை செய்யும் விதமாக சில மறைமுகமான, ஜோக்கான கேள்விகளை எழுப்பினார்.ஆனால் அந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, பாவனா யோகி பாபுவை கிண்டலடித்து இழிவுபடுத்தியதாக பலர் கூறத் தொடங்கினர். இந்த வீடியோவைப் பார்த்த சில யோகி பாபு ரசிகர்கள், பாவனா நடந்துகொள்வது அவமதிப்பாக இருந்ததாகக் கருத்து தெரிவித்தனர். மேலும், சில சமூக விமர்சகர்களும் இது போன்ற செயல்கள் நகைச்சுவை என்ற பெயரில் செய்கிற தவறான உதாரணம் என கண்டித்தனர்.இந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கும்படி வற்புறுத்தப்பட்ட பாவனா, நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது பதிவில் பாவனா, “மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகி பாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து, அதை பகிர்ந்து வருகிறார்கள்” என்றார்.அதனைத் தொடர்ந்து, “இதற்கு முன்னர் நானும் யோகி பாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை எல்லாம் நீங்கள் பார்த்துள்ளீர்களா? குறிப்பாக ஐபிஎல் சமயங்களில் சி.எஸ்.கே போட்டியின் போது? நாங்கள் அதேபோல மிகவும் ஜாலியாக பேச தான் முயற்சித்தோம்.” என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version