பொழுதுபோக்கு

நாய் போல் குரைத்த நடிகை அம்மு; ஷோவில் எடிட் செய்த விஜய் டிவி; நீயா நானா நிகழ்ச்சிக்கு கடும் விமர்சனம்!

Published

on

நாய் போல் குரைத்த நடிகை அம்மு; ஷோவில் எடிட் செய்த விஜய் டிவி; நீயா நானா நிகழ்ச்சிக்கு கடும் விமர்சனம்!

சமீபகாலமாக தெருநாய்களால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக, தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாய்களுக்கு கருத்தடை மருந்து செலுத்தி, காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து, இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்ள் வந்துகொண்டு இருக்கிறது.தமிழகத்தில், கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் மக்களை தாக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள, செய்திகள் என அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ள நிலையில், சீரியல் நடிகைகள் பலரும் தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் நடிகை அம்மு ராஜேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.நாய்கள் பொதுமக்களை தாக்குவது அதிகரித்து வருதால், அதனை கட்டுப்படுத்த தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் விலங்குகள் நல வாரிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சென்னை எழும்பூரில் விலங்குகள் நல வாரிய அமைப்புகள் இன்று அமைதி பேரணியில் ஈடுபட்டன. இந்த பேரணியில், பிரபல நடிகையான வினோதினி, சீரியல் நடிகை அம்மு உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டு ஆவேசமான கருத்துக்களை வெளிப்படுத்தினர். பேசிய, நடிகை அம்மு, வாயில்லா ஜீவன்களால் வாயைத் திறந்து எந்த உணர்வுகளை சொல்ல முடியாது. நமக்கு எப்படி மொழி இருக்கிறதோ, அதுபோல் நாய்களுக்குக் கத்துவது, கடிப்பது தான் அவைகளின் மொழி. அதற்காக எல்லோரையும் பார்த்து நாய்கள் கத்துவதோ, கடிப்பதோ அல்ல. சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் நாய்கள் ஏதாவது ஒருநாள் குரைத்தால் கூட கத்த தொடங்கிவிடுகிறீர்கள் என்று கூறியிருந்தார். இன்றைய நீயா நானா எபிசோட் நமக்கு சொன்ன ஒரே விஷயம் இதான்”Street Dog lovers are more dangerous than street dogs” pic.twitter.com/2CjvhdVW0Mஇதனிடையே விஜய் டிவியின் நீயா நானா ஷோவில், நாய்களுக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரமோவில், தெரு நாய்களுக்கு ஆதரவாக இருப்போர் தெரு நாய்க் கடியால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கருணை காட்டுவதில்லையே என வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தெருநாய் ஆதரவாளர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். இதனையடுத்து நெட்டிசன்கள் எக்ஸ் உள்ளிட்டசமூக வளைதளங்களில் அவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.கோபி அண்ணா தெறிக்க விடறார் 🙌 pic.twitter.com/smgBNOawGlஇதனிடையே நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரமோவில், ஊடகவியலாளர் உமா மகேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு நடிகை அம்முவும் மற்றொரு பெண்ணும் நாய்கள் செல்லமாக இருந்தால், உதவி தேவை என்றால் உள்ளிட்ட சைகைகளுக்கு எப்படி குரைக்கும் என்பதை வித்தியாசமான குரைத்து காட்டினர். இதனால் இந்த ப்ரமோ இணையத்தில் வைரலாக பரவியது. என விதவிதமாக குரைத்துக் காட்டினார்கள். ஆனால் இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகை அம்மு குரைத்த காட்சி இடம்பெறவில்லை. Point 🔥🔥🔥🔥 நாய்க்கு போராட்டம் ரோட்ல இறங்குனவங்க…. யாருமேமனுஷனுக்காக ரோட்ல போராட்டம் பண்ணாதவனுங்க….பணக்காரர்கள். pic.twitter.com/nWLuNoqn4tஇதனை பார்த்த நெட்டிச்னகள் பலரும் ப்ரோமோவில் இந்த காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாதது ஏன்? என கேள்வியை எழுப்பி வருகின்றனர். அதேபோல், தெரு நாய்களுக்கு எதிராகவும் பேசிய பலரின் முக்கிய கருத்துக்களையும் நிகழ்ச்சியில் இருந்து நீக்கிவிட்டதாகவுமு் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், விஜய் டிவி குறித்து கடுமையான விமர்னங்களை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version