இலங்கை
பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டால், சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் இருப்பதாக சிரேஷ்ட பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா எச்சரித்துள்ளார்.
அதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டவுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் எதிர்வரும் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது குறித்து தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யும் வரைபை செப்டெம்பர் மாத தொடக்கத்தில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா மேற்கண்ட எச்சரிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.