சினிமா
பிக் பாஸ் 9ல் எண்ட்ரி கொடுக்கும் கூமாபட்டி தங்கபாண்டி மற்றும் பிரபல நடிகரின் மனைவி.. லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 9ல் எண்ட்ரி கொடுக்கும் கூமாபட்டி தங்கபாண்டி மற்றும் பிரபல நடிகரின் மனைவி.. லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 9 வருகிற அக்டோபர் 5ம் தேதி துவங்குகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. ஷபானா, பாக்கியலட்சுமி நேஹா, வினோத் பாபு, பரிணா உள்ளிட்டோர் பெயர்கள் இதில் கூறப்படுகிறது.இவர்களுடன் இணைந்து தீபக் மனைவி சிவரஞ்சனி போட்டியாளராக களமிறங்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தீபக் இவருடைய மனைவி சிவரஞ்சனி பிக் பாஸ் 9ல் எண்ட்ரி கொடுக்க போகிறாராம்.மேலும் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா, கூமாபட்டி புகழ் தங்கபாண்டி ஆகியோரும் பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வரப்போகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.