இந்தியா

புதுச்சேரியில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு; அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை

Published

on

புதுச்சேரியில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு; அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை

புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேக வெடிப்புகளை முன்கூட்டியே கணிக்க முடியாது, மேலும் அவை நிகழ்ந்த பின்னரே கண்டறியப்படுவதால், மிகுந்த எச்சரிக்கை தேவை என்றும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அனைத்து துறைகளும், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, மின்சாரத் துறை மற்றும் காவல்துறை அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும், எதிர்பாராத சம்பவங்களுக்கு உடனடியாக தீர்வு காண தயாராக இருக்கவும் புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் வீடுகளை விட்டு வெளியேறும்போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். எந்தவொரு அவசரநிலையிலும் போக்குவரத்து மேலாண்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதற்கு காவல் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version