பொழுதுபோக்கு
பெண்ணுடன் தப்பான ரிலேஷன்ஷிப்; கால்ஷீட் தர மறுத்து, சந்திரபாபுவை விரட்டிய எம்.ஜி.ஆர்: நடிகை சொன்ன சீக்ரெட்!
பெண்ணுடன் தப்பான ரிலேஷன்ஷிப்; கால்ஷீட் தர மறுத்து, சந்திரபாபுவை விரட்டிய எம்.ஜி.ஆர்: நடிகை சொன்ன சீக்ரெட்!
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோர் நடிகர்கள் இருந்தாலும், காலத்தை கடந்து தனித்து நிற்கும் வெகு சில நடிகர்களில் நடிகர் சந்திரபாபுவும் ஒருவர். வெறும் நகைச்சுவை நடிகர் என்று மட்டும் சந்திரபாபுவை சுருக்கிவிட முடியாது. பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அவர் நன்றாக பாடுவார், ஆடுவார், பாடல் எழுதுவார், ஆங்கில பாணியில் இசையமைக்கும் திறமையும் கொண்டிருந்தார்.ஆனால் அவ்வளவு எளிதாக அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜெமினி ஸ்டூடியோவில் வாய்ப்பு கிடைக்காததால் அங்கே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஒரு வழியாக 1947-ம் ஆன்ண்டு தன அமராவதி படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு சென்றார்.ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய சோகப்பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டது என்றால் அது சந்திரபாபுவின் பாடல்கள் தான். மேலும் அந்த காலக்கட்டத்தில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்திரபாபு தான். ஒரு வார கால்ஷீட்க்கு அவர் அப்போதே ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினார். சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி ஆகியோரின் படங்கள் என்றாலே அதில் சந்திரபாபு இடம்பெறுவார். சந்திரபாபு தங்கள் படத்தில் நடித்துவிட்டாலே படம் சூப்பர் ஹிட் என்று தயாரிப்பாளர்கள் அவரின் கால்ஷீட்க்காக காத்திருந்த காலம் இருந்தது.சந்திரபாபு சிறந்த நடிகர். பாடகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இருப்பினும் அவரிடைய சில குறைபாடுகளும் இருந்தன. யாரையும் மதிக்காமல் இருந்துள்ளார். மூத்த நடிகர்களை மதிக்காமல் இருந்துள்ளார். உற்சாகம் ஏற்பட்டால் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எம்.ஜி.ஆரை ராமச்சந்திரன் என்று அழைப்பார். தனக்கு மூத்தவர்கள் என்றும் பாராமல் நடந்து கொண்டுள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர்கள் தாம் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் அவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது. அவரை பற்றி வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு நேர்காணலில் பேசுகையில், “ஒரு முறை ‘ஊருக்கு உழைப்பவன்’ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது நங்கள் அனைவரும் லைட்டிங் பிரெச்சனையால் ஷாட் ரெடி ஆகாமல் உட்கார்ந்திருந்தோம். அப்போது எம்ஜிஆர் என்னிடம் என்னை வைத்து படம் எடு நான் நடித்து கொடுக்கிறேன் என்று கூறினார். நான் உடனே உங்களை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்று கூறி விட்டு உள்ளே சென்றேன். கொஞ்சம் நேரம் கழித்து வரிசையாக என் அறைக்கு ஒவ்வொருத்தராக வந்து அவரை வைத்து படம் பண்ணாதீர்கள் என்றனர். நான் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்ற யோசனையுடன் அவரிடமே சென்று கேட்டேன். அதற்க்கு அவர் நான் சந்திரபாபுவிடம் ஒப்புக்கொண்டு ஒரு படம் பண்ணுவதாக இருந்தது, ஆனால் அவர் பெண் தயாரிப்பாளர்களுடன் ஒரு உறவில் இருந்தார். நான் கண்டித்தேன் அவர் கேட்கவில்லை அதனால் நான் கால் சீட் தர மறுத்துவிட்டேன் என்று எம்ஜிஆர் கூறினார்.” என்று பகிர்ந்துள்ளார்.