பொழுதுபோக்கு
பெரிய ஹோட்டலில் பார்ட்டி, ஆனா பில் கட்ட பணம் இல்ல; பாத்திரம் கழுவ ரெடி ஆனேன்: தேசிய விருது பெற்ற பிரபல வில்லன் ஓபன் டாக்!
பெரிய ஹோட்டலில் பார்ட்டி, ஆனா பில் கட்ட பணம் இல்ல; பாத்திரம் கழுவ ரெடி ஆனேன்: தேசிய விருது பெற்ற பிரபல வில்லன் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘தில்’. இந்தப் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து தென்னிந்திய மொழிகளில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.ஹிந்தியில் இவர் முதன்முதலாக நடித்த திரைப்படம் ‘துரோகால்’. இந்த படத்திற்காக அவருக்கு 1995-ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகர் என்ற பிரிவில் தேசிய விருது கிடைத்தது. அண்மையில் ஒரு நேர்காணலில், இந்த தேசிய விருது கிடைத்த சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.அவர் கூறும்போது, “எனக்கு ‘துரோகால்’ படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. அதை கொண்டாடும் விதமாக, படத்தின் இயக்குநர் கோவிந்த் நிகலானி என்னை ஒரு பெரிய ஹோட்டலில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யச் சொன்னார். நான் அதுவரை அந்த ஹோட்டலுக்கு வெளியே நின்று மட்டுமே பார்த்திருக்கிறேன், உள்ளே போனதுமில்லை, அங்கே சாப்பிட்டதுமில்லை.”விருந்துக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த பிறகு, ஆசிஷ் வித்யார்த்திக்கு ஒருவித பதற்றம் ஏற்பட்டது. காரணம், அந்த விருந்து முடிந்ததும் வரும் பில் தொகையை செலுத்த அவரிடம் போதிய பணம் இல்லை. “எங்கே செலவாகிவிடுமோ என்று பயந்து, ஒரு கிளாஸ் ஓட்கா கூட குடிக்காமல், கையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை கலந்த தண்ணீரை மட்டும் வைத்துக்கொண்டேன். அந்த பார்ட்டி முழுவதும் பில் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன்,” என்று அவர் தெரிவித்தார்.ஒரு கட்டத்தில் பயம் தாங்காமல், இயக்குநர் கோவிந்த் நிகலானியை தனியாக அழைத்து, “சார், என்னால் பில்லை கட்ட முடியாமல் போனால் என்ன ஆகும்? அவர்கள் இங்கே பாத்திரங்களை கழுவ சொல்வார்களா? அல்லது போலீஸ் வந்துவிடுமா?” என்று கேட்டார்.ஆசிஷ் வித்யார்த்தியின் நிலையை புரிந்துகொண்ட இயக்குநர், அவரே அந்த விருந்துக்கான செலவை ஏற்றுக்கொள்வதாக கூறினார். அதன்பிறகே ஆசிஷ் வித்யார்த்தி நிம்மதியடைந்து, மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக விருந்தில் கலந்துகொண்டார். தேசிய விருது பெற்ற ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்த இந்த சுவாரஸ்யமான நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.