இலங்கை
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர், வென்னப்புவ மேல்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் முன்னிலையாகி கையொப்பமிட வந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கையொப்பமிட்டதன் பின்னர், வீடு திரும்பிய போது குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.