இலங்கை

மனிதப்புதைகுழி தொடர்பிலும் ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும்! சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை

Published

on

மனிதப்புதைகுழி தொடர்பிலும் ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும்! சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட நாளை வரும் ஜனாதிபதி மண்டைதீவு மனிதப்புதைகுழி தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

Advertisement

மேலும் தெரிவிக்கையில்,

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வருகிறார்.

அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் தான் மண்டைதீவு மனிதப் புதைகுழிகள் காணப்படுகிறது.

Advertisement

மண்டைதீவில் இரண்டு மனிதப் புதைகுழிகள் உள்ளன. அவை அகழப்படப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என

இந்த மாதம் 20ஆம் திகதி வேலணை பிரதேச சபை அமர்வில் இது தொடர்பில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தேன்.

அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement

கடந்த 26 ஆம் திகதி மண்டைதீவு மனித புதைகுழியின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை புதைகுழி உள்ள இடத்தில் நினைவுகூர்ந்து இருந்தோம்.

எனவே நமது தீர்மானத்தின்படி புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவுக்கு வரும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, மண்டைதீவு மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டும்.

Advertisement

ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் செய்வார் என கடற்றொழில் அமைச்சர் சொல்லியிருக்கிறார்.

ஆகவே மண்டைதீவுக்கு வருகின்ற ஜனாதிபதி மண்டைதீவு மனிதப் புதைகுழியை பார்வையிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மண்டைதீவு மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை விரைவில் ஆரம்பிக்கவும் நிதி ஒதுக்கீடுகளை செய்யவும் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version