சினிமா

மேடையில் நடிகையின் இடுப்பை கிள்ளிய பவன் சிங்… நடந்தது என்ன.? வெளியான உண்மை இதோ.!

Published

on

மேடையில் நடிகையின் இடுப்பை கிள்ளிய பவன் சிங்… நடந்தது என்ன.? வெளியான உண்மை இதோ.!

பிரபல நடிகை அஞ்சலி ராகவ் சமீபத்தில் ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டபோது, நடிகர் பவன் சிங் மேடையேறி செய்த தவறான நடத்தை, இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.அஞ்சலி ராகவ் நடித்துள்ள திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அஞ்சலி மற்றும் பவன் சிங் இருவரும் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு கட்டத்தில், பவன் சிங், அஞ்சலி ராகவின் இடுப்பை கிள்ளி உள்ளார். இதையடுத்து, அஞ்சலி ராகவ் அதற்கு வெளிப்படையாக எதிர்வினை காட்டாமல், சிரித்தவாறு கையாள்வது வீடியோவில் தெளிவாக காணப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பலரும் “ஏன் இவர் அவரை எதிர்த்துக் கதைக்காமல் அமைதியாக இருந்தார்…” எனக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.இதற்கு பின்னர், நடிகை அஞ்சலி ராகவ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அந்த நேரத்தில் பவன் சிங் என்னுடைய இடுப்பை தொடும் போது, எனக்கு உண்மையாகவே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆடையின் டேக் என நினைத்து சிரித்துவிட்டேன்.””பின்னர் என் குழுவினர் உறுதி செய்தபோது தான் உண்மை புரிந்தது. அது என்னை மிகவும் கோபமாக்கியது. சம்மதம் இல்லாமல் யாரையும் தொடுவது தவறு. மேடையில் நடந்தது ஒரு பெண்ணாக எனக்கு இழிவாகவும், வேதனையாகவும் இருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதும், பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே பவன் சிங் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version