சினிமா
மோட்டார் ஸ்போர்ட்ஸை எனக்காக அல்ல,நாட்டுக்காக பிரபலப்படுத்துங்கள்!ஜெர்மனியில் அஜித் பேச்சு!
மோட்டார் ஸ்போர்ட்ஸை எனக்காக அல்ல,நாட்டுக்காக பிரபலப்படுத்துங்கள்!ஜெர்மனியில் அஜித் பேச்சு!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித், தனது சமீபத்திய திரைப்படமான குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனது கார் ரேஸிங் ஆர்வத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜெர்மனியில் நடைபெறும் ஒரு முக்கிய கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் அங்கு இருந்த இந்திய ரசிகர்கள் அவரை சந்தித்து, தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்தனர். அப்போது அவர்களுடன் உரையாடிய அஜித், தனது ரசிகர்களிடம் மிக முக்கியமான ஒரு செய்தியை பகிர்ந்தார்.அவர் கூறியதாவது: “கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் முயற்சியுடன் பயிற்சி எடுத்து பங்கேற்கின்றனர். அவர்களின் போராட்டங்களை பலர் அறியவில்லை. ஒருநாள் இந்திய வீரர்களும் அனைத்து வகையான கார் பந்தயங்களிலும் சாம்பியன்களாக மாறுவார்கள். கார் ரேஸ் வெறும் ஃபன்னாக ஓட்டும் போட்டியல்ல,” என்று பேசினார்.அஜித்தின் இந்த உரை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இவரது பேச்சு அவரின் கார் ரேஸுக்கான நிஜமான காதலை பிரதிபலிக்கிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் உருவாகி வருகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.