வணிகம்

ரூ.1,200 சம்பளம் முதல் பல கோடிகள் வரை… அசாத்திய உயரங்களை எட்டிய மாமாஎர்த் கசல் அலாக்!

Published

on

ரூ.1,200 சம்பளம் முதல் பல கோடிகள் வரை… அசாத்திய உயரங்களை எட்டிய மாமாஎர்த் கசல் அலாக்!

சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்து, இன்று இந்தியாவின் யூனிகார்ன் நிறுவனத்தின் இணை நிறுவனராக உயர்ந்த கசல் அலாக்-இன் கதை, பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம். குர்கிராமில் பிறந்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. முடித்த கசல், கலை & வடிவமைப்புப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். வழக்கமான IIT/IIM பாதையில் இருந்து விலகி, தனது தனித்துவத்தை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியது.முதல் சம்பளம் ரூ.1200 மட்டுமே:2008-ல், சண்டிகரில் உள்ள என்.ஐ.ஐ.டி நிறுவனத்தில் கார்ப்பரேட் பயிற்சியாளராக தனது முதல் வேலையை தொடங்கினார். அப்போது அவருக்கு ஒருநாள் வருமானம் வெறும் ரூ.1,200 தான். தனது முதல் சம்பளத்தில் அம்மாவை ஷாப்பிங் அழைத்துச் சென்ற மகிழ்ச்சியான தருணத்தை அவர் இன்றும் நினைவுகூர்கிறார்.”தோல்விதான் முதல் பாடம்”2012-ல் dietexpert.com என்ற உணவுத் திட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றாலும், அதுதான் கசல் அலாக்-இன் தொழில் வாழ்க்கையின் முதல் பாடம். 2016-ல் கசல் மற்றும் அவரது கணவர் வருண் அலாக்-இன் மகனுக்கு ஏற்பட்ட தோல் பிரச்னைதான் மாமாஎர்த் (Mamaearth) உருவாகக் காரணம். குழந்தைகளுக்கான நச்சுத்தன்மையற்ற பொருட்களைத் தேடி அலைந்த போது ஏற்பட்ட சிரமம், ரூ.25 லட்சம் முதலீட்டில் மாமாகார்த் நிறுவனத்தைத் தொடங்க வைத்தது. இன்று, அது இந்தியாவின் மிகப்பெரிய யூனிகார்ன் நிறுவனங்களில் ஒன்று.வெற்றிக்குக் குறுக்குவழி இல்லை!”வெற்றிக்குக் குறுக்குவழி இல்லை, கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அதையும் தாண்டி, ‘எனக்குத் தெரியவில்லை என்றாலும் கற்றுக்கொள்வேன்’ என்ற மனப்பான்மைதான் ஒருவரை வெற்றியாளராக்கும்” என்று கசல் அலாக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தது.ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியின் நடுவராகக் கசல் அலாக் பங்கேற்ற பிறகு, அவரது எளிமையான தோற்றமும், ஆழமான கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. ஒரு நடுத்தர குடும்பத்து பெண், தனது கடின உழைப்பாலும், நேர்மறை மனப்பான்மையாலும் இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்த கதை, அனைவருக்கும் ஒரு பாடம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version