பொழுதுபோக்கு

17 வயதில் திருமண ஆசை, 3 பிள்ளைகளுக்கு தாய்: ரஜினி – கமலுடன் நடித்த இந்த நடிகை பிரபல இசை அமைப்பாளரின் மருமகள்!

Published

on

17 வயதில் திருமண ஆசை, 3 பிள்ளைகளுக்கு தாய்: ரஜினி – கமலுடன் நடித்த இந்த நடிகை பிரபல இசை அமைப்பாளரின் மருமகள்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை, எம்.எஸ்.வி வீட்டு மருமகள் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தூரல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சுலோக்ஷனா. தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சுலோக்சனா, தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.மேலும் புன்னகை மன்னன் படத்தில் ரேவதிக்கும், மைதிலி என்னை காதலி படத்தில் அமலாவுக்கும் டப்பிங் கலைஞராக குரல் கொடுத்துள்ளார். எம்.எஸ்.வி மகன் கோபி கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுலோக்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், வீட்டை மீறி திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்து சில மாதங்களில் இரு குடும்பத்தாரும் இவர்களை ஏற்றுக்கொண்டனர். 3 குழந்தைகள் பிறந்த பிறகு கோபி கிருஷ்ணனா – சுலோக்சனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது சுலோக்சனா தனது 3 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சுலோக்ஷனா, 16 வயதில் ஹீரோயின் ஆனேன். எனக்கு, 17 வயதில் கல்யாண ஆசை வந்து திருமணம் செய்துகொண்டேன். எம்.எஸ்.வி மகன் கோபிகிருஷ்ணா இயக்கத்தில் நடித்தபோது அவர் தனக்கு ப்ரபோஸ் செய்தார். முதல் ப்ரபோஸ் த்ரிலிங்காக இருந்தது என்று கூறியுள்ளார்.தமிழ், தெலுங்கு. இந்தி, கன்னடம் மலையாளம், உள்ளிட்ட மொழிகில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சுலோக்ஷனா, தமிழ், மலையாளம் இந்தி உள்ளி்ட்ட மொழிகளில் பல சீரியல்களிலும் நடித்து அசத்தியுள்ளார். ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, கமல்ஹாசனுடன் தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய படங்களில் சுலோக்ஷனா நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்று சொன்னால், இது எம்.எஸ்.வி தான். அவரது குடும்பத்தினர் சினிமாவின் வெளிச்சம் அதிகம் இல்லாமல் இருந்தாலும், அவரது மருமகள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version