இலங்கை

CIDக்கு செல்லும் கோட்டாபாய ராஜபக்ஷ

Published

on

CIDக்கு செல்லும் கோட்டாபாய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எனினும், அவர் ஆஜராக வேண்டிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பாக அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக உள்ள குற்றச்சாட்டில், வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்க , நாளை  (01) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version