இலங்கை
அதிவேக வீதியில் தீப்பற்றி எரிந்த பயணிகள் பேருந்து
அதிவேக வீதியில் தீப்பற்றி எரிந்த பயணிகள் பேருந்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பயணிகள் போக்குவரத்து பேருந்தில் தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காலியில் இருந்து கடுவெல நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்திலேயே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டது.
கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் இடத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரப் பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், தீ பரவுவதற்கு முன்னரே, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்திலிருந்து அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், அதில் 41 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.