இலங்கை

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; தரைமட்டமான கட்டடங்கள்

Published

on

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; தரைமட்டமான கட்டடங்கள்

   ஆப்கானிஸ்தான், நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

அந்நாட்டு நேரப்படி நேற்று (31) இரவு ஏற்பட்ட குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின், நகங்கர் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

பல இடங்களில் வீதிகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாக கூறப்படுவதுடன் மீட்புப் பணியில் பாதுகாப்புப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மீண்டும் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version