பொழுதுபோக்கு
எஸ்.பி.பி பாடி முடித்த பாடல்; திருப்தி அடையாத புது இசை அமைப்பாளர்; மீண்டும் வந்து மாற்றிப் பாடிய எஸ்.பி.பி; எந்தப் பாட்டு தெரியுமா?
எஸ்.பி.பி பாடி முடித்த பாடல்; திருப்தி அடையாத புது இசை அமைப்பாளர்; மீண்டும் வந்து மாற்றிப் பாடிய எஸ்.பி.பி; எந்தப் பாட்டு தெரியுமா?
புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (எஸ்.பி.பி) மற்றும் இசையமைப்பாளர் பரணி ஆகியோரின் கூட்டணியானது தமிழ் சினிமாவில் சில நினைவுகூரத்தக்க பாடல்களை உருவாக்கியுள்ளது. அப்படியோரு பாடல் உருவான விதத்தை பற்றிதான் இசையமைப்பாளர் பரணி எஸ்.எஸ்.மியூசிக்குக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.இசையமைப்பாளர் பரணியின் முதல் திரைப்படம், நடிகர் விஜயகாந்த் நடித்த ‘பெரியண்ணா’ (1999). இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், இதில் இடம்பெற்ற பாடல்கள். குறிப்பாக, ‘தந்தானே தாமரைப்பூ’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலே எஸ்.பி.பி.யும் பரணியும் இணைந்து பணியாற்றிய முதல் பாடலாக அமைந்தது.இதைத் தொடர்ந்து, இவர்களண்ண்து கூட்டணியில் பல வெற்றிப் பாடல்கள் உருவாயின. அவற்றில் 2002ஆம் ஆண்டு வெளியான ‘சார்லி சாப்ளின்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அவ கண்ண பார்த்தா’ என்ற பாடல் பரணி மற்றும் எஸ்.பி.பி.யின் கூட்டணியில் உருவான மற்றொரு குறிப்பிடத்தகுந்த பாடலாகும்.இசையமைப்பாளர் பரணி தனது முதல் திரைப்படமான ‘பெரியண்ணா’ படத்திற்காகப் பணியாற்றியபோது, தனது முதல் பாடலை எஸ்.பி.பி.யை பாடவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடலை பதிவு செய்ய வந்த எஸ்.பி.பி., வழக்கம்போல் சில நிமிடங்களில் மிக அருமையாகப் பாடி முடித்தார். பாடல் பதிவுக்குப் பிறகு, எஸ்.பி.பி. சென்றுவிட்டார், ஆனால் பரணிக்கு அதில் திருப்தி இல்லாததால் மீண்டும் அவரை அழைத்துள்ளார். நான் என்ன தவறாக பாடிவிட்டேன் எதற்கு என்னை மீண்டும் அழைத்தீர்கள் என்று எஸ்.பி.பி கேட்டதாகவும் கூறினார்.அப்போது, பரணி எஸ்.பி.பி.யிடம் தயக்கத்துடன், “அண்ணே, பாடல் சிறப்பாக இருக்கிறது. ஆனால், நான் நினைத்த உணர்வு மட்டும் இன்னும் வரவில்லை. நீங்கள் ஒருமுறை மீண்டும் பாட முடியுமா?” என்று கேட்டார். கொஞ்சம் லூசியாக தளர்வாக பாடினால் நன்றாக இருக்கும் சார் என்று பரணி கூறியுள்ளார். எஸ்.பி.பி-யும் அதை புரிந்துக்கொண்டு அப்படியே பாடியுள்ளார். பின்னர் பரணிக்கு திருப்தியடைந்ததாகவும் எஸ்.பி.பி போல ஒரு பாடகரைதான் இதுவரை பார்த்தது இல்லை என்றும் கூறினார். இப்படியாக உருவான பாடல்தான் பெரியண்ணா படத்தில் வரும் தன்னானே தாமரைப்பூ பாடல். முதலில் எஸ்.பி.பி பாடி பிடிக்காத பாடல் இரண்டாவது முறையாக அவர் பாடி கொடுத்ததைதான் நாம் அனைவரும் கேட்கிறோம். இந்த பாடல் இப்போது கேட்டால் கூட நமக்கு நடனமாட வேண்டும் என்றுதான் தோன்றும். நிறைய பேருந்துகளில் கூட இந்த பாடல் அடிக்கடி ஒலிக்கும்.