இலங்கை

தங்கையை கேலி செய்த மாணவனுக்கு சம்பவம் செய்த சிறுவர்கள்

Published

on

தங்கையை கேலி செய்த மாணவனுக்கு சம்பவம் செய்த சிறுவர்கள்

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த மனோ (19), தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், மனோவின் சடலம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தெலைவில்  கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இதுகுறித்து நாமக்கல் பொலிஸார் வழக்குபதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மனோவை, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர், பைக்கில் அழைத்து சென்றது பதிவாகி இருந்தது.

அவர்கள் இருவரையும் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஒரு சிறுவனின் 15 வயது தங்கையை, மனோ கேலி, கிண்டல் செய்ததால், முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இரவு, வீட்டில் இருந்த மனோவை, இருவரும் பேசி வெளியே அழைத்து சென்றுள்ளனர்.

Advertisement

பின்னர், மனோவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு சடலத்தை முல்லைநகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டு விட்டுசென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version