இலங்கை
தவறான முடிவெடுத்து மாணவி உயிரிழப்பு!
தவறான முடிவெடுத்து மாணவி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தவறான முடிவெடுத்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை நீண்ட காலமாக மனைவியைப் பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டியுள்ளார். படுகாயம்டைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது நேற்று உயிரிழந்தார். மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலிப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.