இலங்கை
தானே அமைத்த மின்வேலியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!
தானே அமைத்த மின்வேலியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழைப் பகுதியில், பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சிவகுமார் (வயது-64) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். தெல்லிப்பழையில் தோட்டம் செய்து வரும் அவர், பன்றிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தனது தோட்டத்தில் மின்சார வேலியைப் பொருத்தியுள்ளார். நேற்று முன்தினம் காலை தோட்டப் பணிகள் நிறைவடைந்து செல்லும் போது, மின்வேலிக்கான மின்சாரத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். பின்னர், நேற்றுமுன்தினம் மாலை தோட்டத்துக்குத் திரும்பிய போது, மின்வேலியில் தவறுதலாகச் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.