விளையாட்டு

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி: திருச்சி மாணவி தங்கம் வென்று சாதனை

Published

on

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி: திருச்சி மாணவி தங்கம் வென்று சாதனை

திருச்சியில் கடந்த மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டனர். இந்த கராத்தே போட்டியில் குமித்தே (சண்டை) 45 கிலோ எடை பிரிவில் திருச்சி காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி பி.லக்க்ஷனா வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்து தென்னிந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதிபெற்றார்.இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்களில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கோரமங்களா உள் விளையாட்டரங்கில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து சுமார் 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் தமிழக கராத்தே அணி சார்பில் 11 வயதி வயதினருக்கான 45 கிலோ எடைபிரிவில் குமித்தே சண்டையில் போட்டியிட்ட திருச்சி மாணவி பி.லக்க்ஷனா பங்கு பெற்று தங்கப்பதக்கம் வென்று, தமிழகத்திற்கும், திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் லக்க்ஷனா திருச்சி பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியார் கராத்தே அகாடமி மாஸ்டர் சுதாகர் என்பவரிடம் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கப்பதக்கம் வென்று திரும்பிய மாணவியை பள்ளி முதல்வர், சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.செய்தி: க.சண்முகவடிவேல்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version