பொழுதுபோக்கு

தேவர் மகன் ரேவதி கேரக்டர் நான் தான்; ஆனா கமலுக்கு என் நடிப்பு திருப்தியா இல்ல; பிரபல நடிகை உடைத்த உண்மை!

Published

on

தேவர் மகன் ரேவதி கேரக்டர் நான் தான்; ஆனா கமலுக்கு என் நடிப்பு திருப்தியா இல்ல; பிரபல நடிகை உடைத்த உண்மை!

நடிகர் கமல்ஹாசனின் கெரியரில் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது தேவர்மகன் தான். சினிமா படிப்பவர்களுக்கு அப்படம் ஒரு விக்கிப்பீடியாவாக திகழ்ந்து வருவதாக இயக்குனர் மிஷ்கினே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். கமல்ஹாசனின் ஸ்கிரீன்பிளே, பரதனின் இயக்கம், இளையராஜாவின் இசை என படத்தில் அனைத்துமே சிறப்பாக அமைந்திருந்ததால் தேவர் மகன் காலம் கடந்து இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக உள்ளது.தேவர் மகன் படத்தின் கதையை கமல்ஹாசன் வெறும் ஏழே நாட்களில் எழுதி முடித்துவிட்டாராம். கடந்த 1992-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் 32 ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் ஒரு விவாதப் பொருளாக இருக்கிறது. கடந்த ஆண்டு கூட மாமன்னன் படத்தின் ஆடியோ லாஞ்சில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தேவர் மகன் படத்தில் தனக்கு முரண்பாடு இருப்பதாக ஓப்பனாக பேசி இருந்தார். இப்படி பேசுபொருளாக அப்படம் இருந்தாலும் அதன் இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பவர்களும் ஏராளம்.தேவர்மகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கெளதமி மற்றும் ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். அதில் ரேவதி நடித்த பஞ்சவர்ணம் கதாபாத்திரம் இன்றளவும் அவருக்கு ஒரு மைல்கல் கேரக்டராக அமைந்திருக்கிறது. குறிப்பாக கமல்ஹாசன் உடன் அவர் ரொமான்ஸ் செய்யும் இஞ்சி இடுப்பழகி பாடல் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ரேவதி இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா… ஆனால் அது தான் உண்மை.அதன்படி அந்த கேரக்டரில் முதலில் நடிக்க கமிட்டானது நடிகை மீனா தானாம். அவரை வைத்து நான்கு நாட்கள் ஷூட்டிங்கும் நடத்திவிட்டார்களாம். ஆனால் அவருக்கு அந்த கிராமத்து பெண் கதாபாத்திரம் செட் ஆகாததாலும், அவர் மிகவும் இளமையாக காட்சியளித்ததாலும் அவர் செட்டாகமாட்டார் என முடிவெடுத்த படக்குழு, அவருக்கு பதில் நடிகை ரேவதியை நடிக்க வைத்தார்களாம். அந்த கேரக்டரை தன்னைவிட யாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது என சொல்லும் அளவுக்கு நடிகை ரேவதி தட்டி தூக்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.இதை பற்றி நடிகை மீனா ஒரு நேர்காணலில் பேசுகையில்,”தேவர்மகன் படத்தில் நான் ஷூட் சென்றேன். மேக் அப் எல்லாம் போட்டு பார்த்தார்கள். எல்லாம் முடித்த பிறகு கமல் சார் திருப்தியாக இல்லை என்பதால் அந்த கேரக்டர் ரேவதி அவர்களுக்கு போய்விட்டது.” என்று கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version