இலங்கை
நச்சு வாயு கசிவினால் 30 பேர் வைத்தியசாலையில்
நச்சு வாயு கசிவினால் 30 பேர் வைத்தியசாலையில்
கண்டி – புஸ்ஸல்லாவ, டெல்டா தோட்டத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் காற்றுக் குழாயிலிருந்து ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் கம்பளை மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் புஸ்ஸல்லாவ, வகுவப்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீரைச் சுத்திகரிக்கும் குளோரின் இயந்திரம் வெடித்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.