இந்தியா

புதுவையில் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி: எச்சரிக்கும் போலீஸ்!

Published

on

புதுவையில் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி: எச்சரிக்கும் போலீஸ்!

புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களாக ஓ.ஏ.ஜி (OAG App) என்ற செயலியில் பல்வேறு தவணை முறையில், ரூ.2000 முதலீடு செய்தால் தினம் 100 ரூபாயும் ரூ.5,000 முதலீடு செய்தால் 250 ரூபாயும் ரு.10 ஆயிரம் முதலீடு செய்தால் 500 ரூபாயும், ரூ.19,500 முதலீடு செய்தால் தினமும் 700 ரூபாய் தருவதாகக் கூறி விளம்பரம் செய்து உள்ளனர்.அதை நம்பி ஒரு சிலர் கடந்த 3 மாதங்களாக பணத்தை அனுப்பி உள்ளனர். அவர்களுக்கு அவர்கள் சொன்னபடியே அவர்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப பணம் தினமும் வந்து கொண்டிருந்தது.அதை நம்பி அவர்களும் அவரது நண்பர்களும் உறவினர்களுக்கும் இந்த செயலியில் முதலீடு செய்தால் நிறைய பணம் வருகிறது என்று மற்றவர்களுக்கும் சொல்லி அனைவரையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.மேலும் இந்த ஓ.ஏ.ஜி (OAG App) என்ற செயலி பற்றி தினமும் பணம் வந்தவர்கள் சொன்னதை வைத்து, பலரும் பணம் செலுத்தி உள்ளனர். இதற்கு இடையில் அந்த ஓ.ஏ.ஜி குழுவில் 700-க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். முதல் இரண்டு மாதங்களுக்கு சரியாக அவர்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப பணம் தினம் தினம் வந்து கொண்டிருந்த நிலையில், இந்த செயலி குழுவின் நிர்வாகி திடீரென வெள்ளிக்கிழமை மட்டுமே உங்களுக்கு 7 நாளைக்கு சேர்த்து முதலீடு செய்ததற்கு ஏற்ப பணம் அனுப்பப்படும். தினம் தினம் பணம் அனுப்பினால் எங்களுக்கு சரிவர கணக்கு பார்க்க முடியவில்லை என்று கூறி அதேபோல் வெள்ளிக்கிழமை மட்டுமே பணம் அனுப்பியுள்ளனர்.ரூ.19600 க்கு தினமும் 700 ரூபாய் வருகிறது என ஆசைப்பட்ட நிறைய பேர் பணத்தை முதலீடு செய்த போது கடைசியாக கடந்த 2 வெள்ளிக்கிழமை அரசாங்க விடுமுறையாக இருந்ததால் அவர்களால் பணம் அனுப்ப முடியவில்லை என்று கூறி உள்ளனர்.இதற்கிடையில் கடந்த 3 வாரங்களாக யாருக்குமே பணம் வராததால் அவர்கள் இணைய வழியிலும் காவல் நிலையத்துக்கு நேரில் வந்தும் புகார் கொடுத்துள்ளனர். தற்போது வரை தகவல்படி 530 நபர்களுக்கு மேல் பல கோடி ரூபாய் பணத்தை செலுத்தி அவர்களுக்கு அனுப்பி இருப்பது தெரிய வந்தது. இதே போல், கடந்த சில மாதங்களாக லுக்கு ஆப் G7 G9 LOOKAPP AI dashboard கிரிப்டோ போன்ற பல்வேறு ஆப்களில் முதலீடு செய்து பொதுமக்கள் பல கோடி ரூபாய் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.இது பற்றி புதுச்சேரி இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர்  நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், முன்பின் தெரியாத நபர்களிடம் இணைய வழியில் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பெரும்பாலும் இது போன்ற மோசடி ஆப்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இதுபோன்ற பல்வேறு ஆப்களில் முதலீடு செய்து பல கோடி ரூபாய் இழந்தபோதும், அதிக லாபம் கிடைக்கிறது என்று நம்பி மீண்டும் மீண்டும் பொது மக்கள் முதலீடு செய்து பணத்தை இழந்து வருகின்றனர். ஆகவே லிங்க் மற்றும் ஆப் பயன்படுத்தி அல்லது இணைய வழியில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version