இலங்கை
புதையல் தோண்டிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல்
புதையல் தோண்டிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல்
புதையல் தோண்டிய பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள நிலத்தில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று (01) அடையாள அணிவகுப்புக்காக அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது குறித்த பிரதி பொலிஸ்மா அதிபர்தான் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.